எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: மஞ்சம்
அக்கா , நா இருக்கேன் நம்ம ஜலஜாவுக்கு, சொல்லும் கதிரவனை நன்றியுடன் நோக்கினாள் ஆதிரா.
பத்து வயசுல என்ன ஒரு பொறுப்பு? இவனும் , இவனோட சித்தியும் இல்லைன்னா இந்த ரெண்டுங்கெட்டான் பெண்குழந்தையுடன் நம்ம நிலைமை?
பழைய நினைவுகளிலிருந்து மீண்டு ..
தன்னைக் கண்டவுடன் மலர்ந்த ஜலஜாவின் செயலில் கதிரவனின் விழிகளில் நீர் பெருகியது. கட்டிலில் தன்னருகே இழுத்து அமர்த்தி துடைத்துவிட்ட மனைவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
ஹாஸ்டலில் வளர்ந்த மகள் சாந்தினி, தந்தையிடம் தன் காதல் பற்றி சொல்ல, கதிருக்கு ஆதிராவும் சித்தியும் இறந்து ஜலஜாவை மணந்த அந்த நாள் நினைவுகள்அலைமோதின .
திடீரென்று கதிரின் உடல்நிலை பாதிக்க , காதலன் பாதலுடன் சந்திக்க வந்த மகளை அவன் கையில் ஒப்படைத்து இறந்துவிடுகிறார் கதிர் .
கதிர் ஏற்பாடு செய்திருந்த ஆசிரமத்திலிருந்து வந்தவர்களைத் தடுத்து,
அக்கா நா இருக்கேன் உங்களுக்கு என்று ஜலஜாவை பிடித்துக்கொண்டு கதறிய பாதலின் கை தவறி விழுந்த போட்டோவில் ஆதிராவும் , ஓடிப்போன அவள் கணவனும் .
முற்றும்.
