எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: பீரங்கி
காஷ்மீர் எல்லையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த கர்னல் வைபவின் உடல் பீரங்கிகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஆறுதல் கூறிய தங்கை தேவிகாவிடம் , வைபவ் இறந்தது எங்களுக்குப் பேரிழப்புதான் . ஆனால், அது நாட்டைக்காக்கும் உயர்ந்த சேவைக்காகன்னு நெனைக்கிறப்போ பெருமையா இருக்குடி.
‘நா ஊருக்குக் கிளம்புறேன் மானசி. சற்றே தயக்கத்துடன் , தயவு செஞ்சு ராகுல ராணுவத்தில சேர்த்திடாத ..எம்புள்ளைய குண்டுக்கு பலி கொடுக்குற சக்தியெல்லாம் என்கிட்டக் கிடையாதுடிம்மா .
இதோ பாரு தேவி, நாங்க முறைப்படி தத்து எடுத்ததால அவனை நீ உரிமை கொண்டாட முடியாது. வெடுக்கென்ற மானசாவின் பேச்சில் காயப்பட்ட தேவி நகர்ந்துவிட்டாள் .
அம்மா தன்னை ராணுவத்தில் சேர்க்கவில்லை என்று ராகுல் தேவிகாவிடம் புலம்ப..
ஒருவேளை தான் சொன்னதால்தானோ ,ஆர்வமாகக் காரணம் கேட்டவளிடம் ,’தேவி அவன் ராணுவத்தில சேர விரும்பறது, மரியாதைக்காகத்தானே தவிர உண்மையான சேவை உணர்வோட இல்ல, மானசா அவள் எண்ணத்தை உடைக்க, தேவிகாவின் முகத்தில் அசடு வழிந்தது.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.