எழுதியவர்: அனுஷாடேவிட்
சொல்: அன்னாசி
“ஒரு பைனாப்பிள் ஜூஸ்” கடைமுன்னே நின்றுக் கேட்டிருந்தாள் வேலை முடிந்துக் களைப்புடன் நின்றிருந்த ஜெஸி. வாங்கி ரசித்தருந்தியவள் அதற்கானக் கட்டணத்தைக் கொடுத்து நன்றியுரைத்துக் கிளம்பியிருந்தாள் வீட்டிற்கு.
மறுநாள் காலையில் கபோர்டிலிருந்து ஜெஸியின் கணவன் சாம் டீ-சர்ட்டை எடுக்கும் போது கீழே விழுந்தது மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் அணையாடைகள் அடங்கிய நெகிழிப்பை.
“ஜெஸி இந்த மன்த் இதை யூஸ் பண்ணவே இல்லையே நீ” என்க, அப்பொழுது தான் உரைத்தது நாட்கள் தள்ளிச்சென்றிருப்பதை.
பரபரப்புடன் அவனை அழைத்துத்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.
“டாக்டர் டேய்ஸ் தள்ளியிருப்பது தெரியாம நான் பைனாப்பிள் ஜூஸ் குடிச்சிட்டேன். குழந்தைக்கு எதுவும்…” என்று அழுதிருந்தாள்.
“ரிலாக்ஸ் ஜெஸி. நத்திங் டூ ஒர்ரி. ஆசைப்பட்டு பைனாப்பிள் கொஞ்சம் எடுத்துக்கலாம் ஒன்னும் ஆகாது அதிகம் சாப்பிட்டால் தான் பிரச்சினை. இந்த டெஸ்ட் எல்லாம் பஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று மருத்துவச் சீட்டை நீட்டினார்.
அனைத்து டெஸ்ட் முடிவுகளும் பாஸிட்டிவ் என்று வர இருவரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.