எழுதியவர்: ஆர். சத்திய நாராயணன்
சொல்: முட்டை
முட்டை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படியே பச்சையாக சாப்பிடுவேன். ஹோட்டல் சென்றால் ஒரு டபுள் ஆம்லெட் சாப்பிடுவேன்.
மேலே பெப்பர் தூவி சாப்பிட நன்கு பிடிக்கும். முட்டை ஆம்லெட் ஹோட்டல் போகும் போது எல்லாம் சாப்பிடுவேன்.
கல்லூரியில் ஆரம்பமான இந்த பழக்கம் என்னை இன்று வரை விட வில்லை. இப்போதும் டபுள் ஆம்லெட் எனக்கு பிடித்த உணவு.
நான் முட்டை சாப்பிடுவது எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். சிலர் என்னை நேரடியாக கேட்கவே செய்தார்கள்.
” நீ எப்படி முட்டை சாப்பிடலாம்..? ” என்று கேட்டார்கள்.
” அதற்கு என்ன…? ” என்று கேட்டேன்.
“நீ ஒரு பிராமின்…! “
என்று பதில் வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு இன்று வரையில் புரிய வில்லை.
ஆம்.
ஏன் முட்டை சாப்பிட கூடாது என யாரும் சொல்ல வில்லை.
சரி… நான் வருகிறேன். நான் சாப்பிட வேண்டும். டபுள் ஆம்லெட்…!!
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.