எழுதியவர்: ஆதி தனபால்
சொல்: முட்டை
என் மகனின் முகச்சாயல் இருந்தால் தான் நான் சரின்னு சொல்லுவேன்.அதுவும் ஆம்பளப்பிள்ளையா இருக்கனும்..இல்லேன்னா வேணாம்னு சொல் லிடுவேன்.. அத்தையின் பேச்சு அவளுக்குள் ஆணி்அறைந்தது போலிருந்தது.. ஏனென்றால் பெண் குழந்தையைத் தத்தெடுக்க வேண்டுமென நினைத்திருந்தாள்.. வசதியான வாழ்க்கைப் பயணமானானும் குழந்தை பாக்கியம் இல்லேனா,எவ்வளவு பிரச்சனைகளைத் துரத்தி ஓட வேண்டும் என்பது எல்லாருக்கும் நல்லாவே தெரியும்..அதற்கு அவளும் விதிவிலக்கல்ல.. பஞ்சு மெத்தை உறக்கம் முள்ளாய் மனதிலும்,உடலிலும் குத்தியதால் இரவு முழுவதும் கண்ணயரவில்லை.. அதிகாலைத் தூக்கத்தில் கருவிழியினை இமை மூட.. அவர் மட்டுமே முன் வந்து நிற்க.. சீக்கிரம் கிளம்பு.. அத்த… அவங்க அப்பயே கிளம்பியாச்சு.. மின்னல் வேகத்துல கிளம்ப.. நீண்ட நாள் கனவு,இன்று நிறைவேறப் போகிறது..வசை மொழிகளெல்லாம் இன்றுடன் அடங்கப் போகின்றது..என்ற நினைப்புடன் நகர்ந்தாள்.. உள்ளே நுழைந்ததும் விழி நீர் விழிக்குளத்தை விட்டு ததும்பி வெளிவந்து கொண்டிருந்தது.. அவளத்தையின் கைகளில் ஆணொன்றும்,பெண்னொன்றும்.. சில முட்டைகளிலுள்ள இரு கருபோல் இரட்டைக் குழந்தைகளுடன் …
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.