எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
சொல்: சீப்பு
“கண்ணா…! எத்தனை நேரம் கண்ணாடிக்கு முன்னால் நிப்ப? நேரமாச்சு.”என்று அவசரப் படுத்தினாள் அஞ்சலை.
“கண்ணாடியில பாதரசம் இல்லை. தலையை சீவ பல்லு போன சீப்பு. இதுல எப்படி தலை சீவி…! போம்மா…!”
“இந்த மாசம் நல்ல சீப்பு வாங்கி தரேன். வாங்கலாம் நினைப்பேன்.அந்த இருபது ரூபாய் இருந்தா ஒரு வேளை காய்கறி வாங்கலாம் என்று தோணும்.” என்று சொல்லி விட்டு வீட்டு வேலைக்குப் புறப்பட்டு விட்டாள்.
சாயங்காலம் பள்ளி விட்டு வரும் போது அம்மாவைக் காணவில்லை.
அம்மாவைக் தேடிச் சென்றான்.
தெருவில்”சீப்பு மா… சீப்பு… பாக்கெட் சீப்பு, எல்லா சீப்பும் இருக்கு . வாங்க மா …. வாங்க “
ஒரு குரல்.
பழக்கப் பட்ட குரல். “என்னம்மா…! வேலைக்கு போகலையா?”
“வேலை முடிஞ்சு வந்து தான் விக்கறேன். தினமும் சீப்பை பாத்துட்டு, வாங்காம வரதை பார்த்து கடை முதலாளி ‘இதை வித்துட்டு வந்து சீப்பை வாங்கிக்கோ’னு சொன்னாரு”
“அம்மா…குடு மா…! நான் வித்துட்டு வரேன். நீ உட்காரு மா.. மன்னிச்சிடு மா..! என்னால தானே உனக்கு கஷ்டம்.”
‘சீப்பு சீப்பு ‘ என்று கூவிக் கொண்டே சென்றான் கண்ணன்.
அம்மா மனம் நிறைந்தது.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.