எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
சொல்: துடைப்பம்
ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு இனிமையான குரலில் ‘சீமாறு வாங்கலையோ அக்கா….வ் என்று ராகம் பாடி எங்கள் தெருவில் தன் சீமாறுகளை விற்பதற்காக அலைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.
‘ பாரு சுஜா அந்த சீமாறு பொண்ணு எவ்வளவு ராகம் பாடி விக்கிறா,ஒண்ணு வாங்கேன்.
‘அமா உங்களுக்கு வேறு வேலையில்லை.
அடுத்த ஞாயிறு, சீமாறு…’ஏஞ்சல் மகாராணி வந்துட்டா,நீங்க வாங்கலையா’ என்று கிண்டலாக கேட்டாள்.
ஒரு நாள் சுஜா ‘ஏங்க உங்க சீமாறுக்காரி, இரண்டு தெரு தள்ளி, கட்டு விற்கும் போது, அங்கே இரண்டு வயது குட்டிப் பையன் பந்து எடுக்க நடு ரோட்டுக்கு ஓடி வந்த போது,உடனே ஓடிச்சென்று குழந்தையைக் சீமாற்றுக் கட்டின் மேல் தூக்கி எறிந்தாள்.நல்ல வேளை,குழந்தைக்கு ஒன்னும் ஆகல.
அங்கு வேகமாக வந்த கார் அவளை இடித்ததில் அவள் ஸ்பாட் அவுட்டுங்க. பாவங்க நல்ல பொண்ணு, விதி யார விட்டது.
என் காதுகளில் அவள் கூவி விற்கும் ‘சீமாறு வாங்கலயோ அக்கா…வ்’ அவ்வப்போது ரீங்காரமிட்டது.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.