எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணான் (படம் 3)
21ம் நூற்றாண்டில் விஞ்ஞானி ரிஷி ஒரு புதிய மூலப்பொருளை கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை செய்தார். அதற்கு அவர் சூ 3 என்று பெயர் வைத்தார். அதாவது அந்த புதிய மூலப்பொருள் சூரியனில் இருப்பதாக நிருபணம் செய்தார். அந்த மூலப்பொருள் சூரியனில் இருப்பதாக உறுதி செய்தார்.
மேலும் அந்த மூலப்பொருள் சுமார் 3 லட்சம் டிகிரி செல்சியஸ் தாங்கும் என்று உறுதி செய்தார்.
உலகே வியப்பில் மூழ்கியது.ஆம். சூரியனில் வெப்பம் 2 லட்சம் டிகிரி செல்சியஸ் தான். அந்த சூ3 திடமோ…திரவமோ…வாயுவோ அல்ல அது ஒரு கலவை பொருள் என்று தன் ஆராய்ச்சியில் கூறினார்.
இப்போது நாம் இருப்பது 22ம் நூற்றாண்டு.
சரியாக சொல்ல வேண்டுமானால்…..
கி.பி. 2116.
ரிஷியின் ஆராய்ச்சி இஸ்ரோவை மிகவும் கவர்ந்தது. இஸ்ரோ மனிதன் சூரியனுக்கு செல்ல திட்டம் போட்டு தூள் கிளப்பியது. இஸ்ரோ அதற்காக 3 வருடங்களுக்கு முன்பே காரியத்தில் இறங்கியது. ஆம். விண்கலம் கட்ட துவங்கியது. ஆம்…அந்த விண்கலம் முழுவதும் சூ 3 மூலப்பொருள் வைத்து கட்டியது.
இந்த 3 வருடங்களில் இஸ்ரோ 3 நபர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விண்வெளி பயிற்சி கொடுத்தது. விண்கலம் 3 நபர்களை எடுத்து செல்லும் படி வடிவமைத்தது. இஸ்ரோ…2 வருடங்களுக்கு முன்னர் 3 விண்வெளி வீரர்களை தேர்வு செ6ய்து பயிற்சி கொடுத்தது.
- தீபக்
- ஜான்
- சித்தா
மேலும் இஸ்ரோ தனது திட்டத்தை நாடறிய இந்த ஆண்டு துவக்கத்தில்…அதாவது கி.பி.2116 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி நாட்டு மக்களுக்கு அனைத்து விவரங்களையும் ஊடகங்கள் வாயிலாக அறிவித்தது உலகையே
குலுங்கியது.
ஆம்.
திட்டம் பெயர் ஆதித்யா விஜயம். இதில் 3 விண்வெளி வீரர்களை அனுப்ப போகிறோம் என்று அந்த 3 விண்வெளி வீரர் பெயர்களை அறிவித்தது.
ஆம்.
தீபக்
ஜான்
சித்தா
என்று அறிவித்தது. மேலும் ஆதித்யா விஜயம் மே 1 அன்று துவங்கும் என்று அறிவித்தது. வீரர்கள் படம் மற்றும் விண்கலம் படம்
போட்டு விளம்பரம் செய்தது.விண்கலத்தின் பெயர் ஞாயிறு கலம் என்று பெயர் அளிக்கப் பட்டது.
மேலும் ஜனவரி துவங்கி ஏப்ரல் 14 வரை விண்வெளி வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆம். ஜனவரி துவங்கி ஏப்ரல் 14 வரை விண்வெளி பயிற்சி தடபுடலாக நடந்தது. விண்வெளியில் எவ்வாறு அசைவது, தூங்குவது, மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் சொல்லி தரப் பட்டது. மேலும் சிறுநீரை மறு சுழற்சி செய்து தண்ணீர் ஆக்கும் வழிமுறைகளை ஆழமாக பதியும் படி கற்றுக் கொடுத்தது. அது மட்டுமல்ல.ஆக்ஸிஜன் சிலிண்டர் எவ்வாறு கையாள்வது…. மேலும் திடமான உணவு இல்லை.திரவ வடிவில் மட்டுமே உணவு இருக்கும்.
எத்தனை மணிக்கு ஒரு முறை குடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது.
முக்கியமாக…
தீபக் மட்டுமே சூரியனில் கால் பதித்து சூரியனை ஸ்பெஷல் ட்ரோனாகள் மூலம் ஆராய்ச்சி செய்வார்.
ஜான் மற்றும் சித்தா இருவரும் விண்கலத்தில் இருந்து தீபக் – உடன் தொடர்பு கொள்வார்கள். எல்லாம் சமிக்ஞைகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்வார்கள். அவர்கள் 3 பேர் விண்வெளி சைட் சூ3 பொருளால் செய்யப் பட்டது.
இது கட்டாயம். சூ 3 3 லட்சம் டிகிரி செல்சியஸ் தாங்கும் என்று கண்டு பிடிக்க பட்டதால் தான் ஆதித்யா விஜயம் சாத்தியம் ஆனது.
தீபக் சுமார் 3 மணி நேரம் சூரியனில் ஆராய்ச்சி செய்வார்.
இந்த விசேஷ விண்கலம் எவ்வளவு நாட்களில் சூரியனை சென்று அடையும்…எத்தனை மணிக்கு அவர்கள் திரும்புவார்கள்…சூரியனில் ஆராய்ச்சி எத்தனை மணிக்கு முடிவடையும்…என்பது எல்லாம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
உண்மை என்ன வென்றால்…விண்வெளி வீரர் சித்தா ஒரு டாக்டர் பட்டம் பெற்றவர். 3 வருடங்களுக்கு முன்பு தான் அவர் அணு பிளவு மூலம் விண்கலம் உயர செல்ல முடியும் என்று கண்டு பிடித்து இருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால்
அந்த விண்கலத்தின் வேகத்தை ஒரு ஒளியின் வேகத்தில் மேலே இயக்க முடியும் என்று நிருபணம்
செய்து இருந்தார். இந்த விவரம் ரகசியமாக வைத்து இருந்தது இஸ்ரோ. இந்த கண்டுபிடிப்பு ஆதித்யா விஜயம் முடிந்த பிறகு உலகிற்கு அறிவிக்கலாம் என்று இருந்தது. இஸ்ரோவிற்கு நன்கு தெரியும் இந்த கண்டுபிடிப்பு நோபல் பரிசு கிடைக்கும் என்று. ஆதித்யா விஜயம் முடிந்த பிறகு அறிவிக்க இஸ்ரோ டாக்டர் சித்தா விடம் உத்திரவாதம் அளித்து இருந்தது.
ஆம்.
இதில் என்ன ஆச்சரியம்..
வேறு ஒன்றும் இல்லை.
ஒளியின் வேகம் 1,80,000 கிலோமீட்டர்/ நொடி. அதாவது இந்த வேகத்தில் பறந்தால் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால்…இஸ்ரோக்கு முழு நம்பிக்கை இருந்தது.
இஸ்ரோவின் திட்டம். :
விண்கலம் ஒரு ஒளியின் வேகம் சென்றால் வெறும் 8 நிமிடங்களில் சூரியனுக்கு
சென்று விடலாம். ஆம் சூரியன் ஒளி பூமியை வந்து சேர 8 நிமிடங்கலே ஆகும். எனவே மே மாதம் முதல் ஞாயிறன்று சூரியன் செல்ல திட்டம். ஆம் ஆதித்யா விஜயம் 8 நிமிடங்களில் முடிந்து விடும். சுமார் 33 நிமிடங்கள் தீபக் சூரியனில் ஆராய்ச்சி செய்வார். விண்கலத்தில் இருந்து வெளியே வந்து அவர் மட்டுமே ஆராய்ச்சி செய்வார். ஜான் மற்றும் சித்தா விண்கலத்தில் இருந்து சமிக்ஞைகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் திரும்பி வர மீண்டும் அணு பிளவு மூலம …தங்கள் பூமி நோக்கி விண்கலத்தில் வர எரிபொருள் தயார் செய்து விடுவார்கள். மீண்டும் பயணம் 8 நிமிடங்களே…இந்து மஹா சமுத்திரத்தில் இறங்கி விடுவார்கள்.
ஆம். லட்ச கணக்கான கிலோமீட்டர் தள்ளி உள்ள சூரியனுக்கு சென்று விட்டு திரும்புவார்கள்.
மே மாதம் முதல் ஞாயிறு….
ஆதித்யா விஜயம் ஆரம்பம்
ஆனது.
திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்கலம் புறப்பட்டது.
இஸ்ரோ இந்த பயணம் முழுவதையும் உலகின் எல்லா பகுதிகளிலும் தெரியும் படி செயற்கைகோள் மூலம் ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்து இருந்தது.
உலகம் முழுக்க முழுக்க வியந்து பார்த்தது. சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் வெளியே வந்து
சன்டே…சன்டே…
என்று முழங்கினார்கள். தெரு எங்கும் கொண்டாட்டம்.
விண்கலம் 8 நிமிடங்களில் ஞாயிறு சென்று அடைந்தது.
திட்டம் போட்ட படி விண்கலத்தில் இருந்து தீபக் சூரியனில் கால் பதித்தார்.
உலகமே ஆரவாரம் செய்தது.
சன்டே…சன்டே…என்று முழங்கியது விண்ணை தொட்டது. சுமார் சென்று ஒரு மணி நேரம் கழித்து…ஜான் மற்றும் சித்தா இருந்த விண்கலம் தீபக் உடன் இருந்த தொடர்பு
அறுப்பட்டது. எந்த சமிக்ஞைகளும் இல்லை.
நிலையை புரிந்து கொண்டு தீபக் தன்னிடம் இருந்த தூண்டில் போன்ற இருந்த…அதாவது தூண்டிலில் இறுதியில் ஒரு ட்ரோன் இரேந்தது. அதை ப்ரோகிராம் செய்து விண்கலம் அனுப்பினார்.
ஆம்.
சோதனை இல்லாமல் சாதனையா…?
சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் எல்லாம் சரியானது. திரும்பி வந்த ட்ரோன் மூலம் சூரியனின் நுனி மற்றும் மைய இடங்களில் ஆராய்ச்சி செய்து விட்டு சூரியனின் ஆழ் பகுதியில் ஆராய்ச்சி செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். உள்ளே
டார்க் மேட்டர் என்று சொல்லப்படும் கருமை சூழல் தென் பட்டது. வெகு நேரம் ஆராய்ச்சி செய்து விட்டு விண்கலம் வந்து சேர்ந்தார்.
மீண்டும் பயணம்.
8 நிமிடங்களில் இந்து மஹா சமுத்திரத்தில் விண்கலம பத்திரமாக தரை இறங்கியது.
உலகம் எங்கும் ஆர்பாட்டம்…கொண்டாட்டம்…
பட்டாசு வெடித்து…
தீபாவளி போல கொண்டாடினார்கள்.
ஆதித்யா விஜயம் வெற்றி பெற்றது.
மனிதன் சாதித்து விட்டான்.
இது இயற்கை பற்றிய மிகப் பெரிய ஆராய்ச்சி முழு வெற்றி அடைந்தது.
இஸ்ரோ உலகிற்கு ஆதித்யா விஜயம் பற்றி அனைத்தையும் உலக மக்களுக்கு அறிவித்தது.
ஆம்.
22ம் நூற்றாண்டில் ஒரு புரட்சி.
இஸ்ரோ வாழ்க….!
வாழ்த்துக்கள்….!!
பி.கு.– இஸ்ரோவின் சாதனையை உலகமே பாராட்டியது. வியந்தது. உலகம் முழுவதும் இஸ்ரோவின் சாதனையை மனமார பாராட்டியது. உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள்
தீபக் வாழ்க…
ஜான் வாழ்க…
சித்தா வாழ்க…
என்று கோஷம் போட்டது. 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன் யாராவது நினைத்து பார்த்து இருப்பார்களா…
யாரும் இதுவரை செய்யாத சாதனை செய்தது இஸ்ரோவின் மணி மகுடம்.
ஆதித்யா விஜயம் முடிந்த பிறகு இஸ்ரோ சூரியனில் இருந்து கொண்டு வரப்பட்ட
தரவுகளை சோதனை செய்ய சென்னையில் உள்ள விண்வெளி ஆய்வகம் சென்று அடைந்தது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய துவங்கினார்கள்.
சூரியனை பற்றி பல்வேறு புதிய விஷயங்களை கண்டு பிடித்தது. உலகம் வாயில் கை வைத்து பிரம்மிப்பு அடேந்தது.
பிறகு சூரியனில் இருந்து வந்த டாக்டர் சித்தா தனது எரிபொருள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு அறிவித்தார்.
விஞ்ஞான உலகம் அவருக்கு பாராட்டு மழை பொழிந்தது.
2116ம் ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசு அவருக்கு வழங்க பட்டது.
புகழும், செல்வமும் கிடைத்தாலும் அவர் எளிமையாகவும் மற்றும் பணிவாகவும்…இருந்தார்.
என்ன இருந்தாலும் அவர் தமிழர் தானே…?
இது மட்டுமே அல்ல. ஆதித்யா விஜயம் பயண திட்டம் போட்டவர் யார்…??
ஆம்.
அவர் இஸ்ரோ தலைவர் திரு.ரமணி அவர்கள். மிகுந்த அறிவு, ஆக்கம், ஆராய்ச்சி, ஊக்கம், விஞ்ஞான மனம் உடையவர்.
ஆதித்யா விஜயம் பயணத்தில் மிக மிக முக்கிய காரணமாக இருந்தவர் திரு.ரமணி தான்.
அடக்கம் பணிவு ஆர்வம் கடன் உழைப்பு மற்றும் விடா முயற்சி என்று அத்தனை விஷயங்களும் உடையவர்.
விஞ்ஞானம் அவரது உயிர்.
அவர் மூச்சு. சிறு வயது முதலே அவருக்கு விஞ்ஞான ஆர்வம் அதிகம் இருந்தது. அவர் தான் ஆதித்யா விஜயம் பயணத்திற்கு மூளையாக செயல் பட்டவர்.
2116ம் ஆண்டு நோபல் பரிசு ஒரு புதிய துறையை தேர்ந்து எடுத்தது. ஆம்.அது ஆராய்ச்சி துறை. இந்த முதல் நோபல் பரிசு வாங்கிய நபர் திரு.ரமணி
தான்.
ரமணிக்கு வாழ்த்துக்கள்..!!!
