இப்போதைய சூழ்நிலையில் அதிமுக்கியமானது சுயச்சுத்தமே. எங்கெல்லாம் கிருமித் தொற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றுவந்த பிறகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது.
நாம் வழமையாக சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும், குப்பைகளைச் சுத்தம் பின்னும் கைகளை கழுவிடுவோம்.
அதையும் தாண்டி பல வேளைகளில் நாம் கைகளை கழுவிக் கொண்டுத்தான் இருக்கிறோம். வெறும் தண்ணீரிலோ அல்லது சுத்திகரிப்பான் மூலமாகவோ வெறுமனே கைகளை கழுவுவதால், பாக்டீரியாக்கள் முழுமையாக அழிவதில்லை.

மாறாக, சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 வினாடிகளாவது கைகளை நன்றாக தேய்த்துக் கழுவுவதுனாலேயே அவைகளை விரட்டியடித்திட முடியும்.
அதேபோலச் உணவு பதார்த்தங்களை தூசி பறக்கும் இடத்தினில் உண்பதை தவிருங்கள். மனிதர்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
கழுவாத கையுடன் செல்போனை எடுத்துப் பேசாதீர்கள். அழுக்கு கையோடு கண்ணைக் கசக்காதீர்கள்.
வெளியில் உலாவும் கிருமிகளுக்கு நீங்களே பாதையமைத்துக் கொடுக்காதீர்கள் உங்களின் உடலுக்குள் புகுந்து அவைகளின் வேலையைக் காட்டிட.

சுத்தம் முக்கியம் மக்களே. சுத்தமான சுகாதாரத்தை பராமரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது நாம்தான்.