10 வரி போட்டிக்கதை: வலி

by admin
59 views

எழுத்தாளர்: தி. அறிவழகன்

எனக்கு எல்லாமே தேவைப்பட்டது…

இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை என்ற‌ எண்ணமே மனதில்‌ அழுத்திக்கொண்டு கிடக்கிறது.

என்ன வேண்டும் என கேட்க, இந்த மண்ணில் ஒரு ஆள் கூட இல்லை.

என்னை வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட ஆண்கள் கூட்டம் இருப்பதை கண்டு மனம் வெதும்புகிறது.

ஆளே இல்லாத ஒரு அற்புத‌ இடத்திற்கு செல்லலாம் என்று மனம் பதறுகிறது .

தோன்றிய மனதிற்குத் தோன்றிய இடத்திற்கு வந்துவிட்டேன்..

அங்கே நீ…

அற்புத விளக்கென்று ஆனந்தமாய் உன் அருகில் வந்தேன்.

நீ என்னையே உற்றுப் பார்க்கிறாய்..

எனக்கு என்ன செய்வாய் என்று நான் உன்னையே பார்க்கிறேன்…

நீயோ…

என்னை கொஞ்சம் நேரம் உரசிப்பார் அற்புதங்கள் செய்வேன் என்கிறாய்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!