எழுத்தாளர்: மு.லதா
“பைப்பா,பைம்மா” அத்த, மாமா போய்ட்டுவரோம்” “டேய் வினு, சௌம்யா பத்ரம் என்ன”
சரிம்மா,திருமணம் முடிந்து தேனிலவுக்குப் புறப்பட்டனர் வினோத்தும் சௌம்யாவும்.
‘டேய் வினு, ரூம் சூப்பர்டா’ ஹாலிஉட் படத்ல வர மாதிரி இருக்குடா இந்த ரூம்.’
சரி, சாப்ட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு அப்பறமா லேக்ல படகுசவாரி போவோமா சௌமி?
ஓ போலாமே!
ஐயோ என்ன விடு, கொன்னுறாத என்று கத்திக்கொண்டே அறையைச் சுற்றி ஓடினாள் சௌம்யா.அங்குள்ள நிலைக்கண்ணாடியில் தெரிந்த கோரமான உருவத்தின் கைகளில் கூரியகத்தி, ஒரே எட்டில் தாவி அவளைப் பிடித்தது.”ஐயோ கொலை,கொலை “காப்பாத்துங்க,
என்று அலறியபடி அங்குமிங்கும் ஓடினாள்.வினோத், என்ன காப்பாத்து என்று கதறிக்கொண்டே
அவன் மீது விழுந்தாள்,ஐயோ என்று
அலறியபடி எழுந்தான்வினோத்.
சௌமி என்னாச்சுப்பா என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டேமுறைத்தான்.
மொபைல்லஏதாச்சும் கில்லர் மூவி பாக்காதன்னு எத்தன தடவ சொல்றது.?வினூ அங்க பாரேன், ஈவ்னிங்லயே நிலா தெரியுது,அடியே, வந்தேன்னு வை, என்றபடி ஒரே தாவலில் அவளை அணைத்துக் கொண்டான் வினோத்.நிலா வெட்கத்துடன் மேகத்தில் மறைந்து கொண்டது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/