படம் பார்த்து கவி: ரசிக்கும் அழகே

by admin 1
57 views
  • ரசிக்கும் அழகே *
    இப்பேரண்டத்தின் அழகை ரசிக்க
    இதைவிட சிறந்த சிம்மாசனம்
    வேறெங்கும் இல்லை…;!
    எவருமில்லை என இங்கு வந்து
    அமரவில்லை எனை கவர்ந்த
    உனை காண வந்தேன்…;!
    இலைகளை மட்டும் அல்ல
    மலை போல் இருக்கும்
    உணையும் தாங்கி சுமப்பேன்
    என்றது பாசமுள்ள பட்டமரம்.;!!
    இசையின்றி இடைவிடாது
    அசைந்தாடும் உனை விழிகளை விரித்து வியந்து பார்க்கும்
    மலை போல் பலம் கொண்ட உனை
    தாங்கி நிற்கும் பலசாலி நான் என்று
    சிகரம் தொட்டு நிற்கிறது
    பலசாலி பட்டமரம்…!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!