மனிதம்
பரந்த மனமும்
பரிவு குணமுமாய்
பாரத வனத்தில் வாழ்க்கை
பயணத்தை தொடர்ந்தேன்…
கொஞ்சம் கொஞ்சமாக
மனிதநேயம் மண்ணில் புதைய
மனிதன் எம் வனத்தை இரையாக்கிட
நானும் மனிதம் இழந்தேன்…
மனதினை இழந்தேன்…
உடல் வலிமையை இழந்தேன்…
மனிதனின் காட்டில்
உட்புகுந்து விளையாடினேன்…
ஆனந்தம் கொண்டேன்…
இன்று நானும்
மற்றவர்கள் போல்
நடப்பவற்றை களிப்போடு
வேடிக்கை பார்க்கிறேன்…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
