தனிமை பிரிவுழல்
முத்தமிட்ட நாணத்தில் செம்பரிதி மறைந்து செவ்வானமாய் காட்சியளிக்கும் நீல வானம்…
முத்தமிட ஆர்ப்பரிக்கும் அலைகள் நுரைப்பூக்களாய் சங்கமிக்கும் கடற்கரை…
முத்தமழை பொழிந்த மாமழை நின்றும் மலைகளை மறைத்து கொண்டு நிற்கும் விருட்சங்கள்…
மனதை மயக்கம் கொள்ளும்
மாலை வேளையில்
இளங்காற்று தேகத்தை தீண்ட
முத்தமிட்ட நினைவுகளையும்
உன்னுடனான இனிய பொழுதுகளையும்
பிரிவுழல்கிறேன்…
மீண்டும் எப்போது
தனிமையை
மனவிலக்கு செய்து
என்னை அடைவாய்
எனும் பேராவலில்
காத்திருக்கும் நான்
உன் காதலி…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
