படம் பார்த்து கவி: குட்டி யானை

by admin 1
64 views

குட்டி யானை மரக்கிளையில்…
அழகான வரைகலைப்படம்!
கற்பனைக்கு எண்ணமும்
வண்ணமும் கொடுத்தால்,
யானை என்ன!
நமக்கே சிறகுகள் முளைக்குமே!
மனது நினைத்துவிட்டால்……
மரக்கிளையென்ன?
மாமலையும் கடுகாகும்!
“உறக்கத்தில் காண்பது அல்ல கனவு
உறங்கவிடாமல் செய்வதே கனவு”
கலா ம் ஐயாவின் வைர வரிகள்
உண்மைதான்.
தொடரும் நாட்களெல்லாம்
தொடர்ந்து உன் கனவைத்துரத்து….
பேரார்வம் இல்லாது போனால்
சாதனைகள் நிகழாது.
சாதனைகள் கூறட்டும் சரித்திரத்தை!
பாதை இல்லையே என்று
கலங்காதே!
நீ நடந்தால் அதுவே பாதையாகும்.
எட்டிப்பிடி …. வானம் வசப்படும்!
உன் உலகம் உன் காலடியில்!
உயரத்தில் சிம்மாசனமிட்டு
தனிமையில் அமர்ந்து ரசித்திடு
உன் வெற்றிகளை..
மு.லதா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!