எழுத்தாளர்: ரஞ்சன் ரனுஜா
அன்று காதலர் தினம்.
அந்த கிராமத்தின் ஆடவர்களுக்கும் கன்னியர்களுக்கும் ஒரே குதூகலம் தான்.
அன்று தனது அலுவலகத்தில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீதியின் ஓரமாக நடந்து வந்ததுக் கொண்டிருந்தான், குமாரன்.
அவன் அந்த கிராமத்தில் வசிக்கின்ற ஓர் இளைஞன், வயது இருபத்தைந்து இருக்கும் ,இன்றுவரை இவன் கன்னியர்களின் மைவிழி பார்த்து மயங்கியதில்லை.
மங்கையர்களின் மதிமுகத்தினை திரும்பி கூட பார்த்ததில்லை. அப்படியொரு கூச்ச சுபாவம் அவனை ஆட்கொண்டிருந்தது.
சித்தார்த்தனனின் மனதில் காதலை மலரச்செய்த அங்கையற்கன்னி அழகு செல்வி யசோதரை எனும் யௌவனகுமாரி போல ஒரு மங்கை இவனின் மனதிலும் காதலை மலரச் செய்ய வரமாட்டாளா? என அவன் ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க, இரு விழிகளின் காந்தபார்வைகள் அவனின் விழிகளை சந்தித்தன.
அந்த நொடி,அந்த தருணத்தில் அவன் விழி வழியே அவன் இதயத்தில் ஒரு மின்சார பாய்ச்சல்.
அவனுக்காகவே இவ்வையத்தில் பிறந்தவள் வந்துவிட்டாள், என அவன் ஆழ்மனம் கூற மீண்டும் ஒருமுறை அந்த கன்னியின் மை விழியை பார்த்து மயங்கி விழுந்தான், காதலில்.
மறுமுறையும் அவளை காண கண்கள் ஏங்க ,அவன் திரும்பி பார்த்த மறு நொடி அவள் கானல் நீராய் மறைந்து போனாள்.
அன்று மன்மதனும் அவனின் காதலிற்கு துணை நிற்க, அவன் மனதினை கலகம் செய்த அந்த இரு விழிகளின் சொந்தகாரியை தேடிய அலையத்தொடங்கினான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
