எழுத்தாளர்: நா.பா.மீரா
இதயம் கவர்ந்த அந்த நீல விழிகளை வழக்கம்போல் அன்றும் தூரத்தே நின்று ரசித்துக்கொண்டிருந்தான் கோகுல்.’நீலவான ஓடையில் நீந்துகின்ற பெண் மயிலோ?’— எப்படியாவது அந்த விழிகளை அருகில் சந்தித்து பேசிவிடத்துடித்தது அவன் மனம். தன்னியல்பான தயக்கம் தடுக்க கற்பனையில் மட்டுமே வெகு நாட்கள் அந்த விழிகளோடு அளவளாவினான்.நிலாவெளியில் அந்த நீல விழிகளின் ஜொலிப்போடு— அவளும் நானும் ஒருவரை ஒருவர் நோக்க —-அப்படியே ஒரு இன்ப உலா – அடடா — நினைப்பே இனிக்கிறதே!காதல் துளிர்த்தது அவன் மனத்தில் .
சார் —- கொஞ்சம் சாலையை கடக்க உதவ முடியுமா? அதிர்ந்தான் கோகுல் , அவனுக்கு வெகு அருகில் அந்த நீல விழிகள்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
