மனிதா நீ உலகத்தை
சுற்றி பார்க்க தேவையில்லை
அதன் அழகை ரசிக்க தவம் இருக்க தேவையில்லை
மனிதா இங்கே
குப்பிக்குள்
உலகம் குடி கொன்டிருப்பதை பார்
அதன் அழகிய காட்சிகளை பார்
சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய் பாட்டு பாடுவதை பார்
இது எதை வெளிபடுத்துகறது
என்பது உனக்கு புரிகிறதா மனிதா?
ஒர் பொழுதில்
மவுஸ் அழுத்தி
ஒரு க்ளிக் செய்தே
உலகத்தின்
எவ்திசையினையும்
நோக்ககூடிய நவீன
காலத்தை வெளிபடுத்தி நிற்கின்றது அல்லவா
மனிதா இனி என்ன
கவலையைவிடு
உலகம் உன்
உள்ளங்கையில்
M. W kandeepan🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)