எழுத்தாளர்: தி.வள்ளி
டாக்டர் வித்யா பரபரப்பாக ஆஸ்பத்திரிக்கு கிளம்பி கொண்டே” அத்தை மாமா எல்லாத்தையும் ரெடி பண்ணி டேபிளில் வச்சிருக்கறத மதியம் சாப்பிடுங்க” என்றாள்.
“வித்யா நாங்க சின்ன மகன் வீட்டுக்கு போயி ஒரு மாசம் இருக்கலாம்னு நினைக்கோம் ” என்றாள் மாமியார் பர்வதம்.
“தாராளமா போயிட்டு வாங்க சாயங்காலம் ரவியை கொண்டு போய் விடச் சொல்றேன்.”
வித்யா போனபின், கணவனிடம், பர்வதம் வருத்தத்துடன்,” நாம சின்ன மகன் வீட்டுக்கு போறோம்னு சொன்னதுக்கு வித்யா போங்கன்னு சொல்றா.. அவ்வளவுதான் அவளுக்கு நம்ம பேர்ல பாசம் “
சாயங்காலம் வித்யா வர மாமனார் மாமியார் கிளம்பி சின்ன மகன் வீட்டுக்கு போய் விட்டார்கள்.
வித்யாவின் கணவன் ரகுவிடம்,
“என்ன தப்பா நினைக்காதீங்க. எங்க பார்த்தாலும் நோய் தொற்று. தினமும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தா மாமா அத்தை வயசானவங்க,அவங்களுக்கு நோய் தொற்று வந்துட கூடாதுன்னு தான் அவங்களை அனுப்பினேன் “
என்ற மனைவியின் கையை ஆதரவுடன் பற்றினான் ரகு .
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/