எழுத்தாளர்: கங்காதரன்
அவள் அழகானவள் அன்பானவள். சற்றே கோவம் கொண்டவள்… இவையாவும் அவள் பரம ஏழையாய் இருந்தபோது… மிகுந்த கஷ்டப் பட்டு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்த போதும் அவள் அப்படிதான். ஏதோ ஒருவனின் பார்வையில் அவள் பட்டாள். பிறகு நடந்ததெல்லாம் மாயங்கள்… மந்திரங்கள்… யாருக்கும் கிடைக்காத வாழ்வு அவளுக்கு கிடைத்ததென அனைவரும் புகழ்ந்தனர்… சிறு விளக்கில் தெரிந்தவள் இன்று நட்சத்திரமாக ஜொலிக்கிறாள். கைகளில் பட்ட காசினை உச்சி முகர்ந்தவள் இன்று பண மழையில் நனைகின்றாள். இன்றைய நிலைமை பிடித்து இருந்தும் அதனை பிடிக்காமல் வாழ்கிறாள்… ஒற்றை பண சேர்க்கைக்காக தன் ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் தவணை முறையில் இழந்து கொண்டு இருக்கிறாள்.. இவளும் விளக்கில் இருக்கும் ஒற்றை பூதம் போலத் தான்.. எல்லோருக்கும் பிடித்த கேட்ட எல்லாவற்றையும் அவள் செய்து கொடுத்து வருகிறாள்.. தனக்கான நிம்மதியை தேடிக் கொண்டே அலைகிறாள். பூதத்தின் தேவையை ஆசையை யாரும் கேட்டது இல்லை அதைப் போன்றே இவளின் உறவுகளும் தன் தேவைகளை இவள் மூலம் பெற்றாலும் இவளின் ஆசைகளை தேவைகளை கேட்பதில்லை…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/