எழுத்தாளர்:நா.பா.மீரா
நூறு வயதையும் கடந்த வயோதிகம் — தள்ளமையுடன் மெதுவாக நடந்து வந்து சன்னலின் வழி நோக்கிய விசாலாட்சியின் கண்களில்பட்டன சாலையின் ஒரு புறமாக அமைந்த குடிநீர்க்குழாயின் கீழ் மலர்ந்திருந்த இரு சூரியகாந்தி மலர்கள் .கண்களில் நீர் திரையிட அந்த மலர்களில் ஒன்றில் தெரிந்த தன் கணவனின் முகம் நோக்கி — இன்னும் எவ்வளவு நாள் பாவம் பிரேமாவுக்கும் பாரமா —- மலர் அசைந்து ஏதோ சங்கதி சொல்லியது. அதே சமயம் —பக்கத்து அறை சன்னலில் — மாமியாரைக் கவனிக்க முடியாத நிலையில் இருந்த அவளது எழுபது வயது மருமகள் பிரேமாவின் புலம்பலில் அருகிலிருந்த மற்றொரு மலரும் பக்கத்து மலருக்கு இசைவாக அசைந்தது. மறுநாள் விடியலில் விசாலாட்சியின் உயிர்ப்பறவை பிரிந்தது. இரு மலர்களில் ஒரு மலர் அசைவற்று நின்றது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/