10 வரி போட்டிக்கதை: புதிய விடியல்

by admin
67 views

எழுத்தாளர்: கவிஞர் வாசவி சாமிநாதன்

கால்  கடுக்க நடந்து நடந்து வந்த ரிஷிக்கு பிழைப்புக்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்

கையில் பழைமையான விளக்கு ஒன்று தான் அவனது சொத்து .

விளக்கை கையில் ஏந்தியபடி
மனம் நொந்து புழுங்கியபடி
கடற்கரையை அடைந்தான் .

பொழுது கருப்பு உடை அணிய ஆரம்பித்தது .

பிழைக்க வழி ஏதுமில்லையே என்று
அலையை வெறித்து பார்த்தபடி
விளக்கை அருகில் வைத்து அமர்ந்தான் .

சூரியன் துயில் எழ ஆரம்பிக்க
இரவு முழுவதும் வீசிய காற்று
விளக்கின் மேல்பட்டு  தழுவ தழுவ அழகுதேவதை வெளிவந்தாள் .

மனிதா!  “உனக்கு வேண்டியதை கேள் தருகிறேன்”   என்றது!  இனி நான் உன்னுடன் இருப்பேன் ! வேண்டியதை நான் தருவேன் ! என்று கூறியது.

” ரிஷி,நான் செய்யும் தொழில் நன்றாக வளரவேண்டும் என்றதும்  ”  “அப்படியே ! ஆகட்டும்  “என்றது.

“உன்னிடம் உள்ளதை அறியாமல் வெளியே  தேடாதே” என்றது  தேவதை சிரித்தப்படி.

ரிஷி தன் நிலை உணர்ந்து ,,செங்கதிர்கள் அவன் மேல்பட
”  புதிய விடியலை ” நோக்கி
புறப்பட்டான்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!