எழுத்தாளர்: அனுஷா டேவிட்
ஹாய்.. என் பேரு துகிரா.. இதோ பாக்ரீங்களே இதுதான் என் ட்ரீம் ஹவுஸ். எனக்கே எனக்காக நானே டிசைன் பண்ணது.
இவ்வளவு டார்க்கா இருக்கு இதென்ன டிசைன் ஆப் டேஸ்ட்னு நீங்க யோசிக்கிறது தெரியுது. இந்த ஹவுஸ் நிலவறையா டிசைன் பண்ணிருக்கேன்.
அட ஆமாங்க, இந்த சோ கால்ட் ஒய்ப்ஃ மெட்ரீயல்ல இருந்து கொஞ்சம் விடுதலை வேண்டாமா எனக்கு? ‘ஹப்பி’க்கு ஊழியம் செய்றதுலயும், பசங்கள பாத்துகிறதுலயுமே வாழ்க்கை முடிஞ்சிடுனுமா என்ன?
நோ வே. இந்த உலகத்திலே நான் அதிகம் நேசிக்கிறதும் சுவாசிக்கிறதும் புத்தகங்கள் தான்.
அதிலும் தனியா இருந்து புத்தகம் வாசிப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பது போல நற்போதையானது.
நினைச்ச நேரத்தில் பிளாக் காபியை ஒரு கையில் வைத்து மிடறு மிடறாக குடித்து மறு கையில் புத்தகம் வைத்து ரசித்து வாசிப்பது தான் மை லைப்ஃ டைம் கோல். அது இப்ப நிறைவேறியிருக்கு.
தனியே இருந்து எத்தனை நாள் இப்படி புத்தகம் வாசித்து கழிக்க முடியும் மனிதர்கள் முகம் பார்த்து பேசி பழக வேண்டாமா? அப்படின்னு நீங்க நினைக்கிறது நல்லாவே எனக்கு கேட்குது.
புத்தகத்தை விட சிறந்த மனிதனை இந்த உலகில் நீங்க எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாங்க.
எனக்கு எத்தனை பிறப்பிருந்தாலும் அத்தனை பிறப்பிலும் புத்தகம் மீதான நேயத்தோடு தான் பிறப்பேன் வாழ்வேன்.
சரி சரி பாத்ததும் போதும் கிளம்புங்க காத்து வரட்டும். நிலவறை வேற. அதென்ன அந்த புத்தகம்.. ஆங் பொன்னியின் செல்வன் வாசிக்க போறேன். ஹாப்பி ரீடிங்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
