10 வரி போட்டிக் கதை: அடை மழையில் நனைந்த கண்கள்

by admin 1
55 views

எழுத்தாளர்: கவிதா பாலசுப்பிரமணி

தீர்ப்பு முடிந்து காவலர்களுடன் வெளியேறிய அன்னம்மாவை பார்த்து ’அவளுக்கு ஆயுள் தண்டனை பத்தாது.மரணதண்டனை குடுக்கனும்.பொண்ணா இவ?’.’இவளும் ஒரு அம்மா தானா?”என சபிக்காத வாயில்லை.அன்று நடந்தது அன்னம்மாவின் கண்களில் படமாக ஓடியது.’பள்ளி கூடம் போகாத கௌசி . இந்த மாத்திரைய சாப்பிட்டு தூங்கு.வியாபாரம் முடுச்சுட்டு வரேன்”என கிளம்பினாள்.கணவனை இழந்த அன்னம்மாவிற்;கு வளர்ப்பு மகளா இருந்தாலும் 8 வயது கௌசி தான் உலகம்.அவளின் தம்பி ஊரில் இருந்து அன்று வருவான் என அன்னம்மாவிற்;கு தொியாது.வந்தான் அந்த சண்டாளன் அதுவும் போதையில். மாலையில் வீடு திரும்பிய அன்னம்மாவின் தலையில் விழுந்தது இடி.”கௌசி…அய்யோ கௌசி …”ஆடை கலைந்து உயிர் இல்லாமல் கிடந்த கௌசியை பார்த்து கத்தினாள்.போதையில் கிடந்த தம்பியை கன்னத்தில் மாறி மாறி  அறைந்து எழுப்பினாள் .அவன் பிதற்றலில் அவ்வளவு அசிங்கம்.புரிந்தது… வீட்டு கூறைக்கு தீ வைத்தாள் அன்னம்மா.மேகம் திரண்டு மழை கொட்டியது. நனைந்த உடலுடன் வேக வேகமா வண்டி நோக்கி காவலர்கள் அழைத்து சென்றனா;. நனைந்தது உடல் மட்டும் அல்ல அன்னம்மாவின் கண்களும் தான்.கௌசியை நினைத்து…

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!