நெடுஞ்சாலை கொடுஞ்சாலை
ஆனதுவும் ஏன்?
கெட்டுப் போனது மனித மனமா?
இல்லை;
விட்டுப்போன கேள்விகளா?
கட்டுமானத்தில் கலப்படமா?
கட்டுண்ட பணியாளர்களின்
அலட்சியமா?
மாற்றுவழிச்சாலை……. மாற்றான் தோட்டத்து மல்லிகையே!, மலராதா?
மனித இனப் பூஞ்சோலை?!
கரிசனமே இல்லாக் கலவை விகிதங்கள்,
ஒப்பந்ததாரர் உல்லாச ஊர்தியில்!
அவ்வழி பயணிப்பவன் போவான்
இறுதி ஊர்தியில்…..
ஆயிரம் ரமணாக்கள் தோன்றினும்
மாறாதே இந்த நிலை!😬
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
