மனிதனுக்கு உலகம் ஒரு விலங்கு…
பக்தனுக்கு பக்தி ஒரு விலங்கு…
காதலிப்பவர்களுக்கு காதல் ஒரு விலங்கு…
குழந்தைக்கு தாயின் கண்டிப்பு ஒரு விலங்கு…
பெண்ணுக்கு கற்பு ஒரு விலங்கு…
ஆணுக்கு குடும்பம் ஒரு விலங்கு…
சட்டத்திற்கு நீதி ஒரு விலங்கு…
மாணவர்களுக்கு கல்வி ஒரு விலங்கு…
அன்னை, தந்தைக்கு குழந்தைகள் ஒரு விலங்கு…
ஆண், பெண்ணுக்கு கல்யாணம் ஒரு விலங்கு…
பசிக்கு வறுமை ஒரு விலங்கு…
பணத்திற்க்கு பயம் ஒரு விலங்கு…
அழகுக்கு ஆபத்து ஒரு விலங்கு…
மொத்தில் நம் உயிருக்கு உடல் ஒரு விலங்கு…
இந்த இத்தனை விலங்குகளும் அன்பு என்னும் பூவால் செய்யப்பட்ட பூ விலங்கு…
இந்த பூ விலங்குகள் இல்லை என்றால் நியதிகள் என்பது இல்லாமல் இயற்கை தன் சமநிலையை இழந்து விடும்…
ஓவ்வோரு நிகழ்வுக்கும் ஒரு விலங்கு தேவைப்படும் அது தான் நம்ம வாழ்க்கை மாறாமல் பூ விலங்கிட்டு வழி நடத்துகிறது…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
