எழுத்தாளர்: ஷா.காதர் கனி
பக்கத்துல தான் சார் அந்த இடம் இருக்கு பத்து நிமிஷத்துல போயிடலாம்… எந்த
வண்டியை எடுக்கட்டும் என்ற டிரைவரின் கேள்விக்கு பிளாக் பென்ஸ் என்று
மிடுக்காக சொன்னான் ராஜா. பன்னீரும், ரோஜாக்களும் சூழ பாத்டப்பில்
குளித்துவிட்டு வாசனை திரவியங்களைய பூசிக்கொண்டு காரின் கலருக்கு
இணையான வண்ணத்துடன் கோட்டை எடுத்து மாட்டினான். மாடியில் இருந்து மிக
வேகமாக கீழே இறங்கி வழக்கம் போல் வலது கையில் அணிந்திருக்க கூடிய
கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக் கொண்டு காரின் கதவினை திறப்பதற்கும்
அம்மா வந்து எழுப்புவதற்கும் சரியாக இருந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/