10 வரி போட்டிக் கதை: ஏழை செல்வந்தன்

by admin 1
66 views

எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்

கோடி ரூபாய் மதிப்புள்ள பகட்டான சொகுசு காரில், உலகின் கோடியில் இருக்கும் ஜொலிக்கும் கடற்கரை நகரை நோக்கி சுகமாக சென்று கொண்டிருந்தான், உலகின் மிகப்பெரிய செல்வந்தன்.
அவனை பார்ப்பவர்கள் எல்லோரும் அவனின் காரை கண்டு வியந்து பாராட்டுவார்கள்.
அவனின் உடையை கண்டு வியந்து பேசுவார்கள்.
அவனின் செல்வ செழிப்பையும் வியந்து பார்ப்பார்கள்.
நினைத்ததை நினைத்தவுடனே நடத்திக் காட்டும் அளவுக்கு அறிவும், திறமையையும் செல்வத்துடன் பெற்றிருந்தான்.
உயர்வான இடத்தில் தன் சொகுசு காரை நிறுத்தி, மின் விளக்குகளில் ஜொலிஜொலிக்கும் கடற்கரையை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
உலகின் சிறந்தது அத்துனையையும் ஒருங்கே பெற்றிருந்தாலும் ஏதோவொரு வெறுமை அவனது ரசனையான பார்வையையும் தாண்டி அவன் கண்களில்.
எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லை என்ற ஓர் வெறுமை.

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்துக்  கொண்டு வெற்றி பெறுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!