எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
அதிகாலையில் எழுந்ததும் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வேப்பங்குச்சியை ஒடித்து பல்
தேய்த்துக்கொண்டே அவரவரின் காதலி வீட்டின் வாசலில் வரைந்திருக்கும் கோலத்தை
பார்த்துக்கொண்டே நேற்று பள்ளியில் கணக்கு வாத்தியார் அடிச்சதுல இருந்து,
சாயங்காலம் கூட படிக்குற புள்ளயோட பெஞ்சுல நாமும் உக்கார்ந்து அவள் மடியிலேயே
அமர்ந்ததைப்போல சிலாகிச்ச நொடி வரை எல்லாமும் பேசிக்கொண்டே ஊருக்கு
வெளியில் பசுமையான புல்வெளிக்குள் காலை கடனை முடித்துவிட்டு ஆற்றில்
குளித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது “வெளிக்கு போயிட்டு குளிச்சுட்டு வர இவ்ளோ
நேரமா டா? புதுசா கல்யாணம் ஆனா புருஷன் பொண்டாட்டி மாதிரி அப்டி என்ன தான்
குஸ்குஸ்ன்னு பேசுவனுகளோ” என்ற அம்மாவின் திட்டுகளோடு பள்ளிக்கு சென்ற
நாட்களை அசை போட்டுக்கொண்டே கடனில் வாங்கிய தன் வீட்டின் கழிவறையில்
கழித்தான் காலை கடனையும், நினைவுகளையும்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
