எழுத்தாளர்: சுகந்தி குமார்
குட்டிப்பையன் ஆசையாக வானூர்தியில் ஏறுகிறான்
‘குட்டிப் பையா , உன்னையும் எடுத்துக் கொண்டு நான் பறக்கப்போகிறேனே ‘ ‘ நான் கூடத்தான் என் சைக்கிளில் பறந்து செல்வேன், நான் சிறியவன் உன்னை எடுத்துச் செல்ல முடியாது ‘
‘ நான் உன்னை விட வேகமாக பறப்பேனே, உன்னால் முடியுமா?’
“நீ மேலே பறக்கிறாய், எதிரில் யாரும் வர மாட்டாங்களே ‘
‘ ஏன் வரமாட்டாங்க. நான் மேகத்துக்குள் நுழையும் பொழுது அதில் ஆலங்கட்டிகள் நிரம்பி இருந்தால் என் மூஞ்சியை பெயர்த்து விடும் “
“உன் கிட்ட தான் வெதர் லேடார் இருக்குமே, அது ஆலங்கட்டிகளை கண்டு பிடிக்காதா’
‘அது பெரிய மேகத்தை மட்டும் தான் கண்டு பிடிக்கும். என் மூக்கில் இருக்கும் பொருளே அது தான். ஆலங்கட்டிகள் மோதிய உடன் முதலில் உடைவது லேடார் தான்.’
‘ அச்சச்சோ, அப்போ என்ன செய்வாய், எனக்கு பயமாக இருக்கிறதே ” பயப் படாதே பையா, அதனால் பெரிய விபத்து ஏதும் இதுவரை வந்ததில்லை. நீ என்னுடன் ஆனந்தமாக பறந்து விரைவில் போய் சேர்ந்து விடலாம்.
‘ பயமா, எனக்கா, அதெல்லாம் கிடையாது. இதோ வருகிறேன், போகலாம் “
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
