ஆரோக்கியமான நிறை
உணவு …
இதை விட்டு இப்போ பிட்ஸா,
பர்க்கர், பன் என உண்டு…
கண்ட நோய்களை மட்டுமல்ல
செலவை கூட இளைய தலைமுறை இழுத்து வைக்கிறது …
இதனால் நூறு வயது வாழ வேண்டிய நம்ம பாதியில்
சில வேண்டாத உணவு
பழக்கத்தால் போய் விடுகிறோம்..
என்ன ஒன்று இந்த ஆரோக்கியமாக உணவு ஏழைகளுக்கு கிட்டா உணவு…
பணக்காரன் இதை அலட்சியப்படுத்துகிறான்
ஏழை இதை பெற தவம் இருக்கிறான்…
மனிதர்களில் மட்டுமல்ல உணவுகளில் கூட ஏற்ற தாழ்வு உண்டு போல…
நம் முன்னோர்கள் போல உணவே மருந்து என நினைத்தால்
நோய் நொடி இல்லாத வாழலாம்…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
