10 வரி போட்டிக் கதை: காலணி

by admin 1
61 views

எழுத்தாளர்: நா.பத்மாவதி

1.ஊரிலிருந்து வந்த சித்தப்பாவை  பார்த்து சந்தோஷத்தோடு நுழைந்தாள் யாழினி

2.சித்தப்பா அருகில் அமர்ந்தவளை ” எப்படி படிக்கற,”என விசாரிக்க அவளும் பதில் சொல்ல என சிறிது நேரம் கழிந்தது.

3. “சொல்லு, உனக்கு என்ன வேணும்  ட்ரெஸ், செருப்பு, வளையல் இன்னும் வேற என்ன வேணுமோ, வாங்கலாம்”  என்றார் சித்தப்பா.

4. யாழினி சந்தோஷத்தோடு ” “சித்தப்பா, எனக்கு கலர் ட்ரெஸ் வேணாம், யூனிபார்மும் , செருப்புல குஷன் ஹீல்ஸ்லாம் வச்சு நல்ல சிகப்பு கலர்ல வாங்கித் தாங்க சித்தப்பா” என்றாள்.

5. “ட்ரெஸ் சரிமா, செருப்புல இவ்வளவு விவரம் சொல்ற கலர்லாம் சொல்றயே எப்படி?எங்கயாவது பாத்தயா?” என்றார்

6. “ஆமா சித்தப்பா என்னோட ப்ரெண்ட் போட்டுண்டு வந்தா, நா அத கிட்ட பாக்க போனேன், வில ரொம்ப ஜாஸ்தினு சொல்றா”

7.” அந்த  செருப்பு ரொம்ப அழகா வழவழனு , நடக்கவும் மெத்து மெத்துனு இருக்காம்”

8. எனக்கு அந்தமாதிரியே வாங்கித் தாங்க சித்தப்பா ப்ளீஸ் ப்ளீஸ்” என கெஞ்சினாள் குழந்தை

9.  கண்டிப்பா வாங்கப் போவோம் ,போய் ட்ரெஸ் மாத்திண்டு வா  போகலாம் ” என குஷியாக ஓடினாள் யாழினி.

10. குழந்தை யாழினியை ஈர்த்த அந்த விலை உயர்ந்த ஹை ஹீல்ஸ் வழவழ காலணியை வாங்க  சித்தப்பாவும், மகளும் புறப்பட்டனர்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்துக்  கொண்டு வெற்றி பெறுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!