எழுத்தாளர்: மு.லதா
டேய் குமாரு, வாட்ஸாப்ல ஃபோட்டோ
அனுப்பியிருக்கேன் பாரு,அகல்யாவும்
வி.ஆர் . மாலுக்குதான் வந்திருக்காளாம்,
நீதான் பொது இடத்துல பொண்ணுக்கே
தெரியாமப் பார்த்துட்டுப் பிடிச்சிருந்தா
பேசலாம்னு சொன்னியே என்ற அம்மாவிடம்,சரிம்மா ,பார்த்துட்டு சொல்றேன் என்றபடி
இணைப்பைத் துண்டித்தான் ராஜ்குமார்.
அடியே அகல்யா, பையனோட போட்டோ
அனுப்பிருக்கேன்,அவனும் அந்த மாலுக்குதான் வந்திருக்கானாம்,பார்த்திட்டு
சொல்லு என்ற அகல்யாவின் அன்னை
காதம்பரியிடம் ஓகேம்மா என்றபடி
இணைப்பைத் துண்டித்தாள் அகல்யா.
மின்தூக்கியில் யதார்த்தமாகச் சந்தித்துக்
கொண்ட இ ருவருக்கும் பெருத்த ஏமாற்றம்.
அம்மா,இது சரிவராது,பொண்ணு ஒட்டகச்சிவிங்கி மாதிரி உயரமா இருக்கா
என்று அவனும்,அம்மா அவன் நெட்டப்பனமரம் மாதிரி இருக்கான்மா என அவளும்
பேச்சுவார்த்தையையே நிராகரித்தனர்.
சில தினங்கள் கழித்து இருவரும், வழிவிடும் விநாயகர் கோவிலில் சந்திக்க
நேரவே, நீ நீங்க அகல்யா என அவன் தடுமாற,அவளோ நெட்டப்பனமரம் என்று கூறிப்
பின்னர் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
அருகருகே நின்ற இருவருக்கும் குழப்பம்
தீராமல் ஓடிச்சென்று அவரவர் மிதியடிகளைப் பார்த்தவடன் சிரிப்பை
அடக்கமுடியவில்லை.
சில மாதங்களில் திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் இனிமேல் ஹைஹீல்ஸ்
ஷூவோ,காலணியோ
அணிவதில்லை என்று உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
