அதிகாலை சூரியன் போலே
முன்னேறு மேலே மேலே
என் வாழ்வின் அர்த்தம்
நீதான் கண்ணா!!!
வாழையடி வாழையாக
வளர்ந்து விடு மேலே மேலே
சிறு துளி தான் பெருவெள்ளம்
சிந்திக்க வேண்டும் கண்ணா!!!
அதிகாலை பனியே
எனை கரு ஏற்றிய உருவே
என்னாளும் வசந்தம்
எனக்கு நீ தான் தாயே
நதிக்கு கரை போல
எனக்கு அணை நீதானே
நீர் குமிழி என்பது
வாழ்வு மட்டுமல்ல
வசதியும் தான் என்றாயே அம்மா!!!
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
