பொய்யாமொழி புலவனின் வாயுறை வாழ்த்தில்
விண்ணுலகில் உள்ள மழைநீர் மண்ணை தொட வில்லை எனில் ஒரு சிறு புல் கூட வளராது..!! என்றான்
அதுவும் இன்று கண்கூடானதே
கதிரவனின் செங்கதிர்வீச்சு விளை நில நீரினை உறிஞ்சிக் கொள்ள வான் மேகமும் மழை தூளிகளை தூவ மறுத்ததும் ஏனோ?
கழியுக மானிடனின் மனமும் அன்பின்றி வறண்டு சுயநலமாகி இயற்கை அழித்து தான் மட்டும் வாழவேண்டும் என்று பேராசை கொண்ட தருணம்…
வருணன் இட்ட கட்டளையின் படி மழைதிவலைகளும் மண்ணை தொட மறுத்தன போல…
நீரின்றி வறண்ட நிலத்திற்கு அன்பின்றி வறண்ட மானிட மனமும் குணமும் ஒப்பானதே இன்று…
இயற்கையை அழித்து இன்பமாக வாழ முற்படும் மூடர்கள் வாழும் உலகில் இயற்கை தாயை போற்றி இன்னல் இன்றி வாழ வழியேது…
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
