வானம் பார்த்த பூமியடி
நீ தான் எந்தன் சாமியடி
விரிசல் நிலத்தின
சுவடுகள் எல்லாம்-நம்
பாத வெடிப்பின் சாட்சியடி
மும்மாரி பொழிந்த கதையெல்லாம்
மறித்து போன மரத்தோடு போனதடி
எரிசாராயம் நம் சமூகத்தை எரிக்கும்
விவசாயம் நம் மரபை வளர்க்கும்
இன்னும் எதுவும் கெட்டு போகவில்லை
எச்சமிட்ட பறவையின் விதையொன்று
விருட்சமாய் வளர
காத்து கொண்டிருக்கிறது!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
