எழுத்தாளர்: சித்திரவேல் சுந்தரேஸ்வரன்
“அம்மா, ரொம்ப நேரமா பசிக்குதுனு சொல்லிட்டு இருக்கேன். எப்பமா சாப்பாட்டு தருவீங்க?””கொஞ்சம் பொறுத்துக்கடா செல்லம். அப்பா சாப்பட்டோட வந்த பிறகு நாம சாபிடலாம்” என்று கூறியவாறு வாசல் வரைக்கும் சென்று தனது கணவனுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.அப்போது அவள் மனதில் பல எண்ணங்கள் அலைபாய தொடங்கின.ஒவ்வொரு முறையும் சாப்பாட்ட தேடி போகும்போது கிடைக்குமா! கிடைக்காதா! என்ற பயம் இருக்கும்.அப்படியே சாப்பாடு கிடைத்தாலும் அதில் விசம் இருக்குமா! இருக்காதானு! தெரியாது.கரப்பான்பூச்சிகளான எங்கள கண்டாலே பிடிக்காத சனங்க நிறைய பேர் இருக்காங்க.பார்த்த உடனே எங்கள அடிச்சு கொண்ணுடுவாங்க.ஒருவேளை சாப்பாட்டுக்கே போராட வேண்டி இருக்கு.இவரு வேற வெளியே போயிருக்காரு.வர்ர வரைக்கும என் மனசு படுற பாடு எனக்கு மட்டுந்தான் தெரியும்.
முற்றும்.
