மிஞ்சி அணிவிக்கும் முன்
என் நெஞ்சை மயக்குதுடி,
உன் கொலுசொலி!
மருதாணியால் சிவந்தாயா?
என் நினைப்பினால் சிவந்தாயா?
சலசலக்கும்
உன் கொலுசொலியில்,
தடதடக்கும்
என் இதயம்!
முத்தும், மணியும் கொஞ்சிடும்
உன் சலங்கையில்,
என் உள்ளமும் கைவிலங்கிட்டு கொண்டதடி!
உன் கால் காப்பில் என் மனமும் காப்பீட்டு விழ்ந்ததடி!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
