ஒன்று இரண்டல்ல முழுதாய்
ஏழு வருட காதலின்
பொக்கிஷ பந்தம்
முடிவுக்கு வந்தது..
ஆம்…!
காதல் பந்தத்திலிருந்து
மண பந்தத்தில்
அடியெடுத்து வைக்க பெரியோர்கள் நிச்சயிக்க
மண நாளும் கூடி வந்ததடி
பெண்ணே…!
வெட்கப்பட்டு தலைகுனிந்து
ஓரக்கண்ணில் எனை பார்க்கும்
உன் அழகில் சொக்கி போய்
நான் நிற்க
குறித்த நேரத்தில்
மங்கல நாண் சூட்டி
உன் நெற்றியில் குங்குமம் வைத்து
என் உமையலாக்கினேனடி…
அந்த நொடியில்
ரோஜா வண்ணமாக சிவந்த
உன்னிரு கன்னங்கள் எனக்கு பேரழகடி..
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
உன் பாதம் பணிந்தே
மெட்டி அணிவித்தேனடி
கண்ணே…
என் இதழ் தீண்டி
சிவக்கும் முன்னே
மருதாணி உன்
பாதத்தை நாணமுற செய்ததடி
முத்தே..
உன் பாதம் அடியெடுத்து வைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
சிணுங்கும்
உன் கொலுசொலியில்
சிக்கி தவிக்கிறது மனமும்..
இருவரும் புதுப்பந்தத்தில்
இணைந்த மணப்பந்தத்தில்
இணைந்தே முதல் அடி
எடுத்து வைப்போம்
வா என் அன்பே…..!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
