படம் பார்த்து கவி: சுதந்திரமாக பறக்க

by admin 1
54 views

சுதந்திரமாக பறக்க
நினைத்த கோழி
விருந்தில்
உயர்ந்த வகை
உணவாக
இருக்கிறதே

காலை பொழுதை
வரவேற்காது
இறந்து பதபடுத்திய
உணவாக
உள்ளதே

நன்பர்கள் ஒன்று கூடி
இதனை உட்கொன்டு
மகிழ போகின்றார்களா

வயிற்றுக்குள்
இறந்த உடல் செல்லபோகின்றதே
அவர்கள் வயிறு என்ன சுடலையா

இங்கு ஒரு இழப்பு
சந்தோஷமாக
மாற்றபடுகின்றதா

இறந்து கிடப்பது
கோழிமட்டும்மா
இறந்து கிடப்பது
நம் இரக்கமும்தான்
இது தான்
இயற்கை நியதியா..
M. W Kandeepan🙏🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!