எழுத்தாளர்: சுஶ்ரீ
கொடைக்கானல்,நடிகை கல்பனா அந்த நட்சத்திர ஓட்டல் அறையில்
கழுத்து வரை கம்பளி போர்த்தி படுத்திருந்தாள்.அருகில் இருந்த செல்ஃபோன் செல்லமாய் சிணுங்கியது
விடிகாலைத் தூக்கம் கலைந்த கோபமுடன் ஒரு ஹலோ
“உன் கடைசி சில நாட்கள் நிம்மதி தூக்கம் , கண்ணு தூங்கு”அதிர்ந்து போனாள் அழகு தேவதை நிஜ வாழ்விலும் வில்லனா?அவசரமாய் எழுந்து பயந்து போன முகம் கழுவி கீழே வந்தாள்அங்கு இருந்த சொகுசு இருக்கையில் சுதேஷ் அவள் காதலன்.பயந்துட்டயா, அடுத்த வாரம் நம் திருமணம் தூங்க விடுவேனா.பயம் கதிர் ஒளியில் பனியாய் விலகியது, கண்ணில் காதல் கசிந்தது.
முற்றும்.