உன் முகம் மட்டும் அல்ல
உன் பாதத்தின் ஒவ்வொரு
ரேகைகள் கூட என்
நினைவில் உயிர்புடன் இருக்கிறது
என்னை விட்டு எங்கே போனாய்
தேடி தேடி கலைத்து போனேன்
உன் காலடி தடம் வைத்தே
கண்டு கொண்டேன் நீ
என் அருகில் இருப்பதை
சகதியில் வைத்த உன் பாதம்
சுவடு பதிக்கும் என்று
காத்திருக்கிறது என் இதயம்!!
பதிப்பாயா?
- அருள்மொழி மணவாளன்