எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
அழைப்பு மணி ஒலி கேட்டு எழுந்திருக்கப் போன ஜானகி பாட்டியை தடுத்து நிறுத்தியது “பாட்டி ! அமேசான் பார்ஸல் எனக்குத்தான்” என்ற நிம்மியின் குரல்.
நிம்மி, பார்ஸலை திறக்க, அதில் என்ன இருக்கிறது என்று பார்த்த பாட்டியைப் பார்த்து சிரித்த நிம்மி “ இது தான் புதுசாக வந்திருக்கும் மாதவிடாய் கோப்பை, பாட்டி!” என்று சொல்ல, ஜானகி பாட்டி தலையில் அடித்துக் கொண்டாள்.
“புதுசு புதுசா இந்த காலத்து பெண்களுக்கு சௌகர்யம் மட்டுமல்ல எவ்வளவு சுதந்திரமும் இருக்கு.
ஆனால் எங்க காலத்திலே 12 வயசிலே கல்யாணம் பண்ணி வச்சு பிறகு பெண் எப்ப வயசுக்கு வருவா என்று காத்திருப்பா.” என்று பாட்டி சொல்ல,
நிம்மி, ஆச்சரியத்துடன் பார்க்க, ஜானகி பாட்டி “ஆமாம் நிம்மி – ஆனா என் சித்தப்பா பொண்ணு பட்டம்மா தான் ரொம்ப பாவம்” என்று சொல்ல, நிம்மி,
“என்ன ஆச்சு – பாட்டீ?” என்றி கேட்கா, பாட்டி, “பட்டம்மாளுக்கு 12 வயசிலே கல்யாணம் ஆனாலும், அவ 15 வயசு வரை வயசுக்கு வரலை.
அதனாலே, அவளோட புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க, அவங்க அம்மா அப்பா.
“ஐய்யோ ! பாட்டி ! இது என்ன அநியாயம் ?” என்று நிம்மி கேட்க, ஜானகி பாட்டி , பேத்தியின் கன்னத்தைக் கிள்ளி சமாதானப் படுத்தி, “ நல்லவேளை – புருஷனுக்கு ரெண்டாம் கல்யாணம் என்ற சேதி கேட்ட கலவரத்தில், பட்டம்மா வயசுக்கு வந்துட்டா.
அப்புறம் பட்டம்மா வயசுக்கு வந்த சேதியை அவள் மாமனார், மாமியாஉக்கு சொல்லி , பிறகு கஷ்டப்பட்டு அந்த ரெண்டாம் கல்யாணத்தை நிறுத்தினார்கள்”
நிம்மி , “பாட்டி !இப்போ ஒரு புது மாதவிடாய் கோப்பை மட்டும் கிடைக்கவில்லை – உங்க ஜெனரேஷன் பத்தி ஒரு புதுக் கதையும் கிடைச்சது” என்று சொல்ல இருவரும் சிரித்தார்கள்.
முற்றும்.