எழுத்தாளர்: உஷாராணி
கூடை நிறைய வாழைப்பழம். மஞ்சளும் பச்சையுமாக. வாசலில் இறக்கி வைத்து வழிந்த
வியர்வைத் துடைத்து விட்டுக் குரல் கொடுத்தாள் பழம் விற்கிற பாட்டி. அப்பா வாசலுக்கு
வந்து கூடையை எட்டிப்பார்த்தார்.
“இன்னா நைனா அப்டி பாக்கறே.. நம்மூட்டுப் பழம்தான் மருந்து கிருந்து ஒண்ணியும் இல்ல.
தங்கம் மாதிரி மின்னுது பாரு. பத்து பழம் 60ன்னு போடறேன். உனக்கு 12 தறேன். இந்தா
எடு..பாட்டிக்கு உன் கையால போணி பண்ணு” என்று சட்டமாக உட்கார்ந்தாள். அப்பா 40
ரூபாய்க்குப் பேரம் பேசிப் படியவில்லை. எட்டிப்பார்த்த குழந்தையிடம் “இந்தா புடி” என்று
இரண்டு பழத்தை சும்மா கொடுத்து விட்டு சுமையைத்தூக்கிக் கொண்டு வெய்யிலில் நடந்தாள்
பாட்டி.
மாலையில் அப்பா வரும்போது சூப்பர் மார்க்கெட்டில் பேரம் பேசாமல் 80 ரூபாய்க்குப் பத்து
பழம் வாங்கி வந்திருந்தார். ஒரே மருந்து வாடை.
முற்றும்.