அந்தியில் மலரும்
மல்லிகையின் மணத்தோடு உலாவரும் தென்றல்
காமத்தின் கலவியில்
மண(ன)ம் மயக்கும்
இரவின் இளவரசி
அளவற்று பூக்கும்
ஆனந்த நந்தவனத்தில்
வெள்ளை மலர்கள்
உன் அழகில்
பொறாமை கொண்டு
சிவந்த ரோஜாவின்
காதலை ரசிக்க
ஒளிரும் விண்மீன்
மணம் வீசும்
மல்லிகை வாசம்
மன்மதனின் நேசத்தின்
சுவாசமான மல்லிகையே… மகராணி !
பத்மாவதி
