10 வரி போட்டிக் கதை: திருத்திய ராஜா

by admin 1
67 views

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ராஜா எப்போதும் கோபத்துடன் பேசும் வார்த்தைகள் சூறாவளி புயல் வீசுவது போல வாயிலிருந்து வீசுவதை பார்த்த அவன் அம்மா அப்பா அவனை எப்படி திருத்துவது என்று யோசித்தார்கள்.  அப்போது தொலைக்காட்சியில் சூறாவளி புயலால் வீடுகள் நாசம் என்ற செய்தியை பார்த்துக் கொண்டிருந்த ராஜாவை கூப்பிட்டு “நீ பேசும் வார்த்தைகள் இப்படித்தான் உன்னுடைய வாழ்க்கையை நாசம் செய்து விடும் அதனால் நீ தென்றல் போல் மெலிதாக பேச பழகிக் கொண்டால்தான் உனக்கு நண்பர்களும் உறவுகளும் எப்போதும் நிலைத்து நிற்பார்கள்” என்று அம்மா அறிவுரை சொன்னவுடன் அதற்கும் கோபமாக சூறாவளியாக போல வார்த்தைகளை வீசினான்.

பிறகு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவன் அதில் வீடுகளை இழந்தவர்கள் சூறாவளி பயலால் எவ்வளவு கடுமையான  சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டவுடன் அவன் மனம் சிறிது மாறி “அம்மா சாரிமா இனிமேல் நான் இதுபோல கடுமையான வார்த்தைகளை சூறாவளியாக பேச மாட்டேன் தென்றலாக மெல்லியதாக பேசுகிறேன்” அம்மா என்று சொல்ல அவனை திருத்திய அந்த தொலைக்காட்சிக்கு நன்றி சொன்னாள்  அவனின் தாய் .

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!