10 வரி போட்டிக் கதை: இதுவும் தர்மம் தான்

by admin 1
61 views

செந்தில் சாலையில் வண்டியை தள்ளிக்கொண்டு அதில் குல்பி ஐஸ்கிரீம் இவற்றையெல்லாம் விற்பவன். பள்ளிகளுக்கு அருகே நின்று கொண்டு குழந்தைகள் வெளியே வரும்போது அவர்களுக்கு தேவையான ஐஸ்கிரீம் குல்பி  கொடுத்து சாப்பிடு அவர்கள் ரசித்து சாப்பிடுவது பார்த்து ரசித்தான். 

சிறுவயதில் அவன் அப்பா அம்மாவிடம் பலமுறை ஒரு குல்பி  வாங்கி கொடு என்று கேட்டு அவர்கள் வசதி இல்லாததால் அவனுக்கு ஒரு முறை கூட வாங்கிக் கொடுத்ததில்லை.  இதனாலேயே அவன் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு சென்று அங்கு அவர்கள் கொடுக்கும் வண்டியில் ஐஸ்கிரீமை தள்ளிக்கொண்டு சாலையில் விற்கும்தொழிலை ஆசையுடன் ஏற்றுக் கொண்டான்.

அன்று மெயின் ரோட்டில் செல்லும் போது அருகில் இருந்த குடிசையில் பல குழந்தைகள் விளையாடுவதை பார்த்தான்.  அவர்களை அழைத்து ஆளுக்கு ஒரு குல்பி கையில் கொடுத்து சாப்பிட சொன்னவுடன் அந்த குழந்தைகளின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை பார்த்து  தான் சிறு வயதில்  குல்ஃபி ஐஸ்கிரீம் சாப்பிட முடியாத அந்த ஏக்கத்தினை தீர்த்துக் கொண்டான்..

இப்படி குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு குல்பி கொடுப்பதும் ஒருவித தர்மம் தான் என்று நினைத்து அந்த குல்பிக்கான பணத்தை ஐஸ்கிரீம் கடைக்கு கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!