எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி
என்னோட பையன் சரியா படிக்கிறதே இல்லை, எந்த நேரமும் யூ ட்யூப், ரீல்ஸ் பாக்குறதுன்னு செல்லும் , கையுமாதான் இருக்கான்.
அதனால இன்னைக்கு நான் அவனை தண்டச்சோறு, நீயெல்லாம் எங்கேடா உருப்படப் போறேன்னு கோபத்துல கன்னாபின்னான்னு திட்டிட்டேன்.
நண்பரிடம் பூங்காவில் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கலாய்த்தேன். உடனே அவன்
டேய், எப்ப பாத்தாலும் புள்ளைய திட்டிகிட்டே இருக்காதே, உன்னால முடியும், நீதான் சாதிப்பேன்னு நேர்மறையா பேசி ஊக்கப்படுத்திக்கிட்டே இரு. ஊக்கு விற்பவனை ஊக்கப்படுத்தினால் நாளை அவனே தேக்கு விற்பான்னு கவிஞர்.வாலி சொல்லி இருக்காருடா. ஊக்கு மாதிரி குத்திக்கிட்டே இருக்காம அவனை ஊக்குவி. அவனை சுதந்திரமா பறக்க விடு. ஆனா நூலை உன் கையில வைச்சுக்க,
என்ன புரியுதா என்றான் நண்பன். அவன் அறிவுரை என் கோபமெனும் கண்ணை மறைத்து அன்பெனும் கண்ணைத் திறந்தது.
முற்றும்.