எழுத்தாளர்: நா.பா.மீரா
அம்மா – இன்னைக்கு என் தோழி வாணி ஒரு தோடு போட்டிருந்தா — அந்த டிசைன் அப்படியே என் கண்ணுலேயே நிக்குது …. எனக்கும் அந்த மாதிரிப் போட்டுக்கணும்னு ஆசையா இருக்கும்மா ….
மகள் ராணியின் விழிகளில் தொக்கி நின்ற ஏக்கம் …. ஊம் — அவரு சம்பளத்துல வீட்டுச்செலவே சமாளிக்க முடியல …. ஆனாலும் மகள் ஆசைப்பட்டபடி அதே டிசைனில் வாங்கிக் கொடுத்தாள் .
ராணியுடன் பள்ளி செல்லத் தயாராக வந்த மற்றொரு தோழி —-ஏய் சூப்பர்டி….அதே டிசைன் — ஆனா — வாணி போட்டிருக்குற தோடு தங்கம் டி —
அதுனால என்ன இருக்கட்டுமே — எனக்கு எங்கம்மா கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்த இந்தத் தோடுதாண்டி தங்கம் …
தோழியுடன் நடந்த மகளை ஆனந்தக்கண்ணீர் பெருகப் பார்க்கிறாள் அந்த ஏழைத் தாய் .
முற்றும்.