எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
‘இன்னைக்கு என்ன பஸ் இப்படி நிறைஞ்சு வருது? ஹும்…!’ என்று மனசில நினைத்தபடி பஸ்ஸில் கூட்டத்தோட கூட்டமா வனிதா ஏறினாள்.
தோளில் கை பை, கையில் லஞ்ச் பேக் உடன் பெண்கள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டாள்.
அவள் பின்புறம் நின்ற ஒருவன் கூட்ட நெரிசலில் கையை அவளது இடையில் வைத்தான்.
மெதுவாக தன் தாலி சரடில் இருந்த ஊக்கை எடுத்து நீக்கி அவனது கையில் நறுக் என்று குத்தினாள்.
“ஆ”என்று கத்தியவன் சுதாரித்துக் கொண்டு கையை எடுத்தான்.
அவன் காலால் வனிதாவின் பக்கத்தில் இருந்த பெண்ணை சீண்டவும் அவள் குனிவது போல் குணிந்து ஊக்கால ஒரே குத்து.
அடுத்த ஸ்டாப்பில் அலறி அடித்து கொண்டு இறங்கி விட்டான்.
‘கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின்றாடுவோம்.’
முற்றும்.
